Corona Virus

உலகம் முழுக்க 3 லட்சத்தைக் கடந்த உயிர்பலி... 50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - ஜான் ஹாப்கின்ஸ் தகவல்!

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 48, 05,229 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.

அமெரிக்காவில் இயங்கும் பொதுச் சுகாதாரப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 48,05,229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 15, 27,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 2,81,752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 90,978 பேர் பலியாகினர். பிரிட்டனில் 34,636 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 28,108 பேரும், ஸ்பெயினில் 27,650 பேரும் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 18, 60,056 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories