கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் மார்ச் 24ம் தேதியில் இருந்து நடைமுறையில் இருந்த ஊரடங்கு இன்று வரை மூன்று கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் (மே 17) மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருப்பதால், மே 18ம் தேதிக்கு முன்னர் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் மே 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்றும், கோவை, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விவரம் பின்வருமாறு:-