Corona Virus

தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. இன்று மட்டும் 639 பேருக்கு தொற்று உறுதி.. #CoronaUpdate

கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 81 பேருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 11 ஆயிஅரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 480 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் மொத்தம், 6750 பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. இன்று மட்டும் 639 பேருக்கு தொற்று உறுதி.. #CoronaUpdate

கடந்த நான்கு நாட்களாக பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் இன்று 12,445 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 4172 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 634 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகையால், 6971 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்று 4 பேர் பலியானதில் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியான நால்வரில் தலா இருவர் சென்னை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள்.

banner

Related Stories

Related Stories