Corona Virus

“பிச்சை எடுத்தாலும் என்னால் இயன்றதைச் செய்வேன்” - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், 4ம் கட்ட ஊரடங்குக்கான புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கிறது.

ஆனால், 50 நாட்கள் ஆகியும் நெடுஞ்சாலைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை இன்னும் குறைந்தபாடில்லை. அவ்வாறு செல்லும் பல தொழிலாளர்கள் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கூட கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள்.

வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை விட பசிப்பிணியால் நாட்டில் பலி ஏற்படுவது அதிகரிக்கும் என பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“பிச்சை எடுத்தாலும் என்னால் இயன்றதைச் செய்வேன்” - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

இதற்கிடையே, ஊரடங்கால் அவதியுறும் மக்களுக்காக சினிமா பிரபலங்கள் பலர் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வழங்குவது, உணவு விநியோகிப்பது, தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வது என பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர்.

அவ்வகையில், நடிகர் பிரகாஷ்ராஜும் ஊரடங்கால் தவித்து வந்த கிராம மக்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை நித்தமும் செய்து வருகிறார். அதுபோல, சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் பிச்சை எடுத்தாலும், கடன் வாங்கினாலும் என்னை கடந்து செல்லும் சக மனிதனுக்கு என்னால் இயன்றதை செய்துக்கொண்டே இருப்பேன். அவர்கள் எனக்கு திருப்பி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, வரும் வழியில் எங்களுக்கு ஒருவர் நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கி உதவினார் என நினைத்தாலே போதும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும், அவரது செயலும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று, பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories