Corona Virus

#CoronaUpdates : தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்!

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் உட்பட இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 384 பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களில் 81 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 7 பேருக்கும், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என 477 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 10 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள போதும் இன்று 10,535 மாதிரிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 639 மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

#CoronaUpdates :  தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்!

மூன்று திருநங்கைகள் உட்பட 6,945 ஆண்களுக்கும், 3,637 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய எண்ணிக்கையில் மட்டும் 303 ஆண்கள், 174 பெண்கள் அடங்குவர்.

இன்று ஒரே நாளில் 939 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, ஒட்டுமொத்தமாக 3,538 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

#CoronaUpdates :  தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்!

இதனையடுத்து, ஐசோலேஷன் வார்டில் உள்ள நோயாளிகள் உட்பட மொத்தம் 6,970 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சென்னையில் மட்டும் இன்று பாதிக்கப்பட்ட 332 பேருடன் சேர்த்து 5,017 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலி எண்ணிக்கையை பொறுத்தவரையில் இன்று மூவர் உயிரிழந்ததோடு மொத்தம் 74 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே 51 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories