Corona Virus

#CoronaUpdate ; தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று... 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அவ்வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது.

#CoronaUpdate ; தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று... 9  ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5262-ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 25 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

#CoronaUpdate ; தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று... 9  ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மூவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

இன்று 42 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரை 2,176 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் 6,984 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories