Corona Virus

சென்னையில் ஒரே நாளில் 8 பேர் பலி... 510 பேர் பாதிப்பு - கொரோனாவின் பிடியில் தலைநகரம்! #Corona

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4882-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருமே சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 8 பேர் பலி... 510 பேர் பாதிப்பு - கொரோனாவின் பிடியில் தலைநகரம்! #Corona

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியது முதல் செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று அரியலூர் மாவட்டத்தில் 36 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் 6,520 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories