Corona Virus

மே 18 முதல் சென்னையில் பேருந்துகளை இயக்க முடிவு? - விபரீதம் புரியாமல் விளையாடும் எடப்பாடி அரசு!

கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக இருக்கும் நிலையில் சென்னையில் மே 18ம் தேதி முதல் மாநகர பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் 500க்கு மேல் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே இதுவரை 4,371 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேலான பகுதிகள் நோய் கட்டுப்பாடுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் எடப்பாடி அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நோய் தொற்று மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகமுள்ளது.

அதன்படி, இன்று முதல் 34 வகையான தனிக்கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே 17ம் தேதியோடு மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுற இருக்கும் நிலையில், வருகிற 18ம் தேதி முதல் சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 18 முதல் சென்னையில் பேருந்துகளை இயக்க முடிவு? - விபரீதம் புரியாமல் விளையாடும் எடப்பாடி அரசு!

அதில், மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் 20 பயணிகளும், 5 பயணிகள் நின்றபடியும் பயணிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட உள்ளது. வைரஸ் பாதிப்பு குறைவதற்கு ஏற்றாற்போல் பயணிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை அதிகரிக்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதேபோல, மின்சார ரயில்களில் பெட்டிக்கு 50 பேரும், மெட்ரோ ரயில்களில் மொத்தமாகவே 160 பேரும் பயணிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

முன்னதாக நாளை முதல் 15 வகையான ரயில் சேவைகள் இயங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. தற்போது சென்னை மாநகரத்திலும் நோய்ப் பரவலை கட்டுப்படுத்தாமல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பது முற்றிலும் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஐயப்பாடில்லை.

banner

Related Stories

Related Stories