Corona Virus

“கொரோனாவுடன் வாழதான் சொன்னார்கள்.. சாகச் சொல்லவில்லையே?” - பா.ஜ.க ஆதரவாளர் சர்ச்சை பேச்சு! #CoronaVirus

கொரோனா வைரஸின் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்தும் வேளையில் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 4 ஆயிரத்து 213 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. இதுவரையில், 67 ஆயிரத்து 152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 97 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மொத்தம் 2206 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இப்படி நாட்டில் கொரோனா தனது தீவிரத்தை காட்டி வரும் சூழலில் மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வருகிறது. இது போன்ற தளார்வுகள், மேன்மேலும் தொற்று பாதிப்பை அதிகப்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

“கொரோனாவுடன் வாழதான் சொன்னார்கள்.. சாகச் சொல்லவில்லையே?” - பா.ஜ.க ஆதரவாளர் சர்ச்சை பேச்சு! #CoronaVirus

இந்த சமயத்தில், கடந்த 8ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால், கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய சவால்தான். மக்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லவ் அகர்வாலின் இந்த கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டிருக்கிறது. ஏனெனில், கொடிய நோய் சூழ்ந்திருக்கும் நேரத்தில் மக்களை காக்க வழிகளை மேற்கொள்ளாமல், அந்த பாதிப்புடன் வாழ வேண்டும் எனக் கூறுவது அரசின் கையாளாகத்தனத்தையே காட்டுகிறது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், பா.ஜ.கவின் ஆதரவாளாரும், வலதுசாரி சிந்தனையாளருமான கோலாகல ஸ்ரீநிவாசன், தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் கருத்துக்கு சர்ச்சையை கிளப்பும் வகையில் பதிலளித்திருக்கிறார்.

“கொரோனாவுடன் வாழதான் சொன்னார்கள்.. சாகச் சொல்லவில்லையே?” - பா.ஜ.க ஆதரவாளர் சர்ச்சை பேச்சு! #CoronaVirus

அதில், கொரோனா வைரஸை எதிர்த்து போராடச் சொன்ன மத்திய அரசு தற்போது அதனோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என சொல்வது ஏன் என நெறியாளர் வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த கோலாகல ஸ்ரீநிவாசன், கொரோனாவுடன் வாழ வேண்டும் என்றுதானே கூறியிருக்கிறார்கள். யாரையும் சாகச் சொல்லவில்லையே என்று பதிலளித்திருக்கிறார்.

இவரது இந்த பதில், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்கு அரசுகள் எவ்வளவோ வழிகளை பின்பற்றி வரும் நிலையில், பாஜக அரசு எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories