இந்தியாவில் கொரோனாவின் 63,420 ஆக உள்ளது. அதில், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு விகிதம் மே இறுதிக்குள் 75 ஆயிரத்தை தொடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் எய்ம்ஸ் மருத்துவர்களோ ஜூன், ஜூலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவித்திருந்தனர்.
இப்படி இருக்கையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபார்ரோ இந்தியாவின் நிலை குறித்து பேசுகையில், ஊரடங்கை தளர்த்தும் போது கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வரும் மாதங்களில் அதாவது ஜூன், ஜூலையில் கொரோனாவின் தாக்கம் உச்சத்திலேயே இருக்கும். ஆனால், அது விரைவில் சீராகிவிடும். முன்கூட்டியே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பெருமளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்க்கையில் அது குறைவாகதான் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியால் தொற்று பரவல் குறைவாக இருப்பதற்கு காரணம் நாட்டின் வெப்பநிலை. ஆகவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நபார்ரோ கூறியுள்ளார்.