சீனாவுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு, கொரோனா வைரஸின் பாதிப்புகள் குறித்த உண்மை விவரத்தை உலக சுகாதார நிறுவனம் மறைத்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தற்போது ஜெர்மனியின் தேசிய புலனாய்வு அமைப்பு கூறியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வுஹான் நகரில் பரவத் தொடங்கிய நாவல் கொரோனா வைரஸ் எனும் கோவிட் 19 கொள்ளைநோய் தற்போது உலகின் 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸூக்கு இதுகாறும் 4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கவில்லை என டெல் ஸ்பீகல் என்ற ஜெர்மனி ஊடகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் சீனாவில் உறுதியான பிறகு, ஜனவரி 21ம் தேதியன்றி உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானத்தை சீன அதிபர் ஜி ஜின் பிங் தொடர்புகொண்டு பேசியதாவும், அப்போது மனிதனுக்கு மனிதன் பரவும் என்பதை வெளிப்படுத்தவேண்டாம் என ஜின்பிங் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தி தற்போது உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கவில்லை என சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெர்மன் ஊடகத்தின் செய்தி பரவியதை அடுத்து, இந்த தகவலில் உண்மைத்தன்மை இல்லை எனக் கூறி உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கமளித்துள்ள அந்நிறுவனம், உலக சுகாதார நிறுவனம் சீனாவுன் எவ்வித உடன்பாட்டிலும் ஈடுபடவில்லை. டெர் ஸ்பீகலில் குறிப்பிட்டதை போன்று எந்த நிகழ்வும் நடக்கவில்லை.
மேலும், ஜனவரி 20ம் தேதியே கொரோனா வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவும் என சீனா உறுதி செய்திருக்கிறது. அதனடுத்தபடியாக உலக நாடுகளுக்கு ஜனவரி 22ம் தேதி கொரோனா தொடர்பாக செய்தி அறிவிக்கப்பட்டது என்றும், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் பங்கம் விளைவிக்கும் விதமாக இது போன்ற செய்திகள் உலாவருகின்றன என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.