Corona Virus

சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா: இன்னும் 2ம் நிலையில்தான் உள்ளதா வைரஸ் பரவல்? பீதியில் மக்கள்!

சென்னையில் முதல் முறையாக ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமான பாதிப்பு சென்னையில் உள்ள நிலையில் அடுத்தபடியாக இன்று திருவள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தபாதிப்பு 7204 ஆக உள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையோடு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனையடுத்து, மொத்தமாக 47 ஆக பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா: இன்னும் 2ம் நிலையில்தான் உள்ளதா வைரஸ் பரவல்? பீதியில் மக்கள்!

அதேச்சமயத்தில் இன்று ஒரே நாளில் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த நிலையில் நேற்று முதல் அது அதிகரித்துள்ளது. இதுவரையில் 1959 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 639 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில், 3171 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகள் 47 ல் 28 சென்னையில் ஏற்பட்டுள்ளது.

இன்று பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,367 ஆக உள்ளது. மொத்தமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 37 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா: இன்னும் 2ம் நிலையில்தான் உள்ளதா வைரஸ் பரவல்? பீதியில் மக்கள்!

மேலும், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள் நீங்கலாக 5195 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், ஆண்கள் 4907 பேரும், பெண்கள் 2295 பேரும், 2 திருநங்கைகளும் அடங்குவர்.

இன்றைய எண்ணிக்கையில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் குழந்தைகள் என 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இன்று அறிவிக்கப்பட்ட பாதிப்புகளில் அனைவருமே ஏற்கெனவே வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories