Corona Virus

அறிகுறியில்லையெனில் மீண்டும் PCR சோதனை எதற்கு? - மத்திய சுகாதாரத்துறை புது அறிவிப்பு! #CoronaUpdates

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்ததை உறுதிசெய்ய மீண்டும் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ரேபிட் கிட் சோதனை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நாடுமுழுதும் பி.சி.ஆர். சோதனையை நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரக் கணக்கில் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் நோய் பாதித்தவர்கள் குணமடைந்ததை உறுதி செய்ய மீண்டும் சோதனை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுவரை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்ற நிலையில் அவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டு தொற்று முழுமையாக குறைந்துவிட்டது என்பதை உறுதிசெய்த பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அறிகுறியில்லையெனில் மீண்டும் PCR சோதனை எதற்கு? - மத்திய சுகாதாரத்துறை புது அறிவிப்பு! #CoronaUpdates

அதில் தற்போது மாறுதலை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அதாவது, குறைந்த மற்றும் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் அவர்களை வீட்டுக்கு அனுப்பலாம். அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்து கொரோனா இல்லை என்பதை உறுதிபடுத்த தேவை இல்லை. அவர்கள் வீட்டில் 7 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம்.

தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பும் போது மட்டும் அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்து கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories