Corona Virus

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் மூவாயிரத்தை கடந்த பாதிப்பு! #CoronaUpdate

கடந்த ஒரு வாரமாக இரட்டை இலக்கத்தில் இருந்த குணமானவர்களின் எண்ணிக்கை இன்று மூன்று இலக்கத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னையில் மட்டுமே 171 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றும் 500-ஐ கடந்துள்ளது. இன்று 526 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

வழக்கம்போல், சென்னையிலேயே இன்றும் அதிக தொற்று எண்ணிக்கை உறுதியாகியுள்ளது. 279 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து, சென்னையில் மொத்த பாதிப்பு 3,330 ஆக உள்ளது. அடுத்தபடியாக இன்று விழுப்புரத்தில் 67 பேருக்கும், செங்கல்பட்டில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் மூவாயிரத்தை கடந்த பாதிப்பு! #CoronaUpdate

பாதிப்பு எண்ணிக்கையை போன்று, நாளொன்றுக்கு ஒருவர் வீதம் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அவ்வகையில் இன்று 4 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக சென்னையில் 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்திருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக இரட்டை இலக்கிலேயே இருந்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று மூன்று இலக்கில் இருப்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இதுவரை 1,824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அதிலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 171 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள 6,535 பேரில் 1,867 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும், குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் நீங்கலாக மொத்தம் 4,664 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் மூவாயிரத்தை கடந்த பாதிப்பு! #CoronaUpdate

மேலும், இன்று பதிவான பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 திருநங்கைகள் உட்பட, 4,495 ஆண்களுக்கும், 2,038 பெண்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பில், 15 வயதுக்குட்பட்ட சிறார்கள், குழந்தைகளில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories