Corona Virus

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பில் பித்தலாட்டம்? -  டெல்லியில் நடந்த குளறுபடி அம்பலம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 2 நபர்கள் மட்டுமே பலியானதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பில் பித்தலாட்டம்? -  டெல்லியில் நடந்த குளறுபடி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கும் முடிவடைவதற்கு 8 நாட்களே உள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

எய்ம்ஸ் மருத்துவர்களோ, ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனாவின் தாக்கம் மேன்மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்தியாவில் சமீபத்தில் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோருக்கு கொரோனா தாக்கியதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாததால், எளிதில் வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டுபிடிப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பில் பித்தலாட்டம்? -  டெல்லியில் நடந்த குளறுபடி அம்பலம்!

இதன் காரணமாக, சுமார் 45 நாட்களுக்கு பிறகு நாளொன்றுக்கு ஒரு லட்சம் சோதனை என கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரையில், இந்தியாவில் கொரோனாவால் 1981 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இப்படி இருக்கையில், டெல்லியில் நிகழும் கொரோனா உயிரிழப்புகளில் மருத்துவமனை மற்றும் அரசின் தகவல்களில் பெரும் வித்தியாசம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட பல மருத்துவமனைகளின் கணக்குகளின் படி டெல்லியில் 111 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மட்டுமே பலியானதாகவும், RML மருத்துவமனையில் 52ம், லோக் நாயக் மருத்துவமனையில் 47 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசோ இவ்விரு மருத்துவமனைகளையும் சேர்த்து 31 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தாமாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 68 பேர் என பதிவிடப்பட்டுள்ளது. இப்படி நாட்டின் தலைநகரிலேயே கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குளறுபடியாக இருக்குமெனில், இதர மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கையிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறையும், ஐ.சி.எம்.ஆரும் தலையிட்டு வெளிப்படையான தகவலை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories