Corona Virus

இன்று மட்டும் 3 பேர் பலி... 600 பேர் பாதிப்பு - தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500-ஐக் கடந்து வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டர்களின் மொத்த எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,361 ஆக உள்ளது.

இன்று மட்டும் - 13,980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,16,416 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories