Corona Virus

"நீங்கள் உதவுவீர்கள்" என்று எதிர்பார்த்த மக்களிடமே பிடுங்குவது நியாயமா பிரதமரே!

கொரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி தவிக்கும் மக்களுக்கு மேலும் சுமை ஏற்படுத்தும் விதமாக பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

"நீங்கள் உதவுவீர்கள்" என்று எதிர்பார்த்த மக்களிடமே  பிடுங்குவது நியாயமா பிரதமரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Venkatesh R S
Updated on

கொரோனா ஊரடங்கு அறிவித்து 45 நாட்கள் கடந்து விட்டது. இன்னும் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. மாறாக இப்போது தான் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக வருவாயில்லாமல், இருப்பதை வைத்து நாட்களை கடத்தியுள்ளனர். தொழில்கள் முடங்கியுள்ளன. ஏழை மக்களுக்கு 3 வேளை உணவு அரிதாகிப் போனது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியில்லாமல், உணவில்லாமல், இருக்க இடமில்லாமல் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சொந்த ஊரி திரும்பியிருக்கின்றனர். சோறு தண்ணீர் இல்லாமல் நடந்ததில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர்.

"நீங்கள் உதவுவீர்கள்" என்று எதிர்பார்த்த மக்களிடமே  பிடுங்குவது நியாயமா பிரதமரே!

இன்றைய பொழுதை எப்படி கழிக்கப் போகிறோமோ என கவலையுடனே தினமும் காலையில் மக்கள் கண் விழிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மக்களுக்கு நிவாரணத் தொகையாக, 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என பொருளாதார அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மோடி அரசோ மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் கொடுக்கவில்லை, கொரோனா சிறப்பு நிவாரண நிதியும் கொடுக்கவில்லை. மக்களுக்கு வெறும் 500 ரூபாயும் 5 கிலோ அரசியும் கொஞ்சம் மளிகை பொருட்களையும் மட்டுமே வழங்கியது.

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு ஒரு அரசாங்கமாக, ஒரு பிரதமராக ஒரு உதவியும் செய்யாத மோடி, இப்போது மக்களை சுரண்டத் தொடங்கிவிட்டார்.

"நீங்கள் உதவுவீர்கள்" என்று எதிர்பார்த்த மக்களிடமே  பிடுங்குவது நியாயமா பிரதமரே!

பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை முறையே 10 மற்றும் 13 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதனால், பேரிடர் நேரத்தில் சிரமங்களுக்கு இடையில் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் காய்கறிகள், மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், இவ்வளவு ஏன் மருத்துவப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப் போகிறது.

கையில் இருப்பதை வைத்து வயிற்றை கழுவி வந்த மக்களிடம் இருந்து அதையும் பிடிங்கும் செயலைச் செய்திருக்கிறார் மோடி. வரி வருவாய் இல்லை என்பதைக் கூறி நியாயம் பேசக் கூடும். அப்படி நியாயம் பேசும் மத்திய அரசுக்கும் அதை ஆதரிப்போரும் இந்த 3 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

1. 500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி, அதுவும் ஜன்தன் யோஜ்னா வங்கிக் கணக்கு உள்ள 20% மக்களுக்கு மட்டுமே வழங்க கஜனாவே காலியாகும் அளவுக்கா செலவாகிவிடப் போகிறது. மத்திய அரசிடம் நிதி இல்லையா?

2. ஒரு சில கார்ப்பரேட்களுக்கு 1.75 லட்சம் கோடி வரி தள்ளுபடி, வங்கிய ஏமாற்றிய விஜய் மல்லையா, மெஹுல் ஜோக்ஸி, நீரவ் மோடி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலைகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி செய்யத் தெரிந்தவர்களுக்கு, புலப்ம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில் பயண செலவைக் கூட ஏற்க மனம் வராதது ஏன்? அதற்கு கூட உங்களிடம் நிதி இல்லையா? கொடுக்க மனம் இல்லையா

3. சரி உங்களிடம் நிதி இல்லை என்று வைத்துக் கொள்வோம். மக்களால் நன்கொடை செய்யப்பட்ட PM Cares பொது நிவாரண நிதியில் குவியும் பணம் இருக்கிறதே. அதையும் செலவு செய்ய மறுப்பது ஏன்?

"நீங்கள் உதவுவீர்கள்" என்று எதிர்பார்த்த மக்களிடமே  பிடுங்குவது நியாயமா பிரதமரே!

மக்கள் ஏதோ உங்களிடம் கையேந்துவதாக நினைத்து ஆணவம் கொள்ள வேண்டாம். அவர்கள் உழைப்பில் இருந்து கொடுத்த வரிப்பணத்தை தான் மக்கள் கேட்கிறார்கள். சராசரி தமிழக குடிமகன் ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரி செலுத்துகிறான். அப்படி உழைத்து தன்மானத்தோடு வாழந்தவர்கள், அடுத்தவரிடம் உணவுப் பொட்டலத்தை கைநீட்டி வாங்கும் போது கூனிக் குறுகிப் போகிறார்கள்.

அரசாங்கத்திடம் கேட்பதில் அவர்களுக்கு எந்த தன்மானப் பிரச்னையும் இல்லை. ஏனெனில் அதைக் கேட்க மக்களுக்கு உரிமை இருக்கிறது. அது மக்களின் பணம்.

ஆனால் அந்த உழைப்பை எல்லாம் வங்கியை ஏமாற்றிய முதலாளிகளுக்கும், உழைப்பை சுரண்டும் கார்ப்பரேட்களுக்கும் வாரிக் கொடுத்துவிட்டு, இப்போது வரிகளைப் போட்டு பசித்துக் கிடப்பவனின் கோவணத்தையும் உருவ நினைப்பது தான் ஃபாசிச மனோபாவத்தின் உச்ச நிலை.

"நீங்கள் உதவுவீர்கள்" என்று எதிர்பார்த்த மக்களிடமே  பிடுங்குவது நியாயமா பிரதமரே!

பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கும். ஏற்கெனவே வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களை இது கூடுதல் பாரத்தை ஏற்படுத்தும். அரசும் நிதி உதவி செய்யாது. வருவாய் ஈட்ட வெளியில் சென்றாக வேண்டும். வெளியே சென்றா தொற்று அதிகரிக்கும். அதிகரித்தால் என்ன? எங்களுக்கு வரி வேண்டும் நீ வெளியில் செல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை, என தீவிரமான கட்டத்தில் ஊரடங்கை தளர்த்தியுள்ளனர். அதன் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிசையில் கொரோனா ஊரடங்கு சிறு குறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. சுமார் 2 கோடி பேருக்கு வேலை வழங்கும் இத்துறை, சரிந்து கொடுக்கும் நிலையில், இப்போது மக்களிடம் சுரண்டும் இந்த வரியையும் கொண்டு போய் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நாட்டின் ஏழை மக்களை காப்பதற்கு 65,000 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும் என்கிறார், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். ஆனால், மோடியோ மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்கிறார். பசியில்லாம பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

எந்த ஒரு பேரிடர் காலத்திலுமே, மக்களின் சக்தியால் மட்டுமே இந்த சமூகம் மீண்டு வந்திருக்கிறது. சக மனிதனுக்கு உதவ மக்களுக்கு தெரியும். ஆனால், மக்களாகிய நாங்களே உதவிக் கொள்ள வேண்டும் என்றால்,நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்? அரசாங்கம் என்று ஒன்று எதற்கு? பிரதமர் என்ற ஒருவர் தேவையா?

Related Stories

Related Stories