Corona Virus

தமிழகத்தில் அதிதீவிர பரவலில் கொரோனா பாதிப்பு : இன்று சென்னையில் மட்டும் 324 பேருக்கு தொற்று - இருவர் பலி!

கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த வாரம் வரை தினசரி நூறை ஒட்டி இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நேற்றும், நேற்று முன் தினமும் 500ஐக் கடந்தது. ஆனால், இன்றைய எண்ணிக்கை இமாலய அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 4,829 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 324 பேரும் அரியலூரில் 188 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக கடலூரில் 324 ஆகவும், அரியலூரில் 222 ஆகவும் உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 771 பேரில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 52 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிதீவிர பரவலில் கொரோனா பாதிப்பு : இன்று சென்னையில் மட்டும் 324 பேருக்கு தொற்று - இருவர் பலி!

மேலும் இருவர் உயிரிழந்ததால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 3,275 பேர் உள்ளனர். இன்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 413 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 1 லட்சத்து 88, 241 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

871 மாதிரிகளின் முடிவும், மறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 9,769 மாதிரிகளின் முடிவும் இன்னும் வெளிவரவில்லை. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,516 ஆக உள்ளது. இன்று 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories