Corona Virus

சென்னையில் 54 போலிஸாருக்கு வைரஸ் தொற்று... காவல்துறையை பீதியில் ஆழ்த்திய கொரோனா! #CoronaUpdates

சென்னையில் ஏற்கெனவே கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று ஒரே நாளில் 13 போலிஸாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாகப் பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 2,008 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 279 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 15 மண்டலங்களில் திரு.வி.க நகர், கோடம்பாக்கம், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் 200க்கும் அதிமான பாதிப்பு எண்ணிக்கையை பெற்றுள்ளது.

2,008 பேரில், 20 பேர் உயிரிழந்துள்ள் நிலையில், 327 பேர் குணமடைந்திருக்கிறார்கள். எஞ்சியுள்ள 1,652 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 90% பேருக்கு அறிகுறிகளே இல்லையென சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காவல்துறையிலும் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் காவல்துறையைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், மற்றொரு துணை ஆணையரின் ஓட்டுநர், 8 பயிற்சி பெண் காவலர்கள், 10 போக்கு வரத்து காவலர்கள் என 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, இன்று டி.ஜி.பி அலுவலக தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர், சூளைமேடு உதவி ஆய்வாளர், ஆயுதப்படை காவலர்கள் 4 பேர் என 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 54 போலிஸாருக்கு வைரஸ் தொற்று... காவல்துறையை பீதியில் ஆழ்த்திய கொரோனா! #CoronaUpdates

இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த 54 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலிஸாருக்கும் கொரோனா தொற்று பரவி வருவது காவல்துறையினரை கலங்க வைத்து, பீதியடையச் செய்துள்ளது.

பொதுவெளியில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்காமல் அரசு வேலைபார்க்க வைப்பதே இதற்குக் காரணமாக அமைகிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories