Corona Virus

இன்றும் 500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு : மொத்த பாதிப்பு 4,058 ஆக உயர்வு - அச்சத்தில் தமிழகம்! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று விவரத்தை ஒவ்வொரு நாளும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால், தினம் தினம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி, இன்று (மே 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,058 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. திருநங்கை ஒருவருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,008 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில் 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 38 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories