Corona Virus

சென்னையில் முதல் முறையாக இரட்டை சதம்: கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா.. மொத்த பாதிப்பு 3,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியது. சென்னையில் மட்டும் 1458 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளானர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் முதல் முறையாக 203 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து 3023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,458 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்து, டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உள்ளது. இன்று வெறும், 38 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆனால், சிகிச்சையில் 1611 பேர் உள்ளனர்.

சென்னையில் முதல் முறையாக இரட்டை சதம்: கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா.. மொத்த பாதிப்பு 3,000ஐ தாண்டியது!

அதேபோல, உயிரிழப்பு எண்ணிக்கையும் 30 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இன்று 10 ஆயிரத்து 617 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்றும், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 716 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று தொற்று உறுதியான 266 பேரில் 15 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 170 பேரும், 13-60 வயதுடையவர்கள் 2,564 பேரும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 289 பேரும் உள்ளனர். இதில் ஒரு திருநங்கையும் அடங்குவர்.

banner

Related Stories

Related Stories