Corona Virus

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு இரட்டை சதம்.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு! #CoronaUpdate

சென்னையில் தீவிரமாக கொரோனா பரவி வரும் நிலையில் இன்றும் 174 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றைய பாதிப்பும் 200ஐ கடந்துள்ளது. நேற்று 203 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 2 எண்கள் குறைந்திருந்தாலும், மொத்த பாதிப்பு 1,257 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2,757 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு இரட்டை சதம்.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு! #CoronaUpdate

இன்று மட்டும் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, அரியலூரில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், இன்று ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வந்த நிலையில் இன்று வெறும் 29 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு திருநங்கை உட்பட 1,384 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 12 வயதுக்கு கீழ் உள்ள 14 நாள் குழந்தை உட்பட 7 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு இரட்டை சதம்.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு! #CoronaUpdate

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 39 நாட்களில் முதன்முறையாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று மட்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இன்று 10,127 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 132 பேருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நேற்றுவரை 28 ஆக இருந்த தமிழகத்தின் பலி எண்ணிக்கை இன்று 29 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதுடைய மூதாட்டி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories