Corona Virus

பச்சை மண்டலம் இல்லாத மாநிலமானது தமிழகம்... கிருஷ்ணகிரியிலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது!

கொரோனா பாதிப்பே இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது முதியவருக்கு வைரஸ் இருப்பது உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சை மண்டலம் இல்லாத மாநிலமானது தமிழகம்... கிருஷ்ணகிரியிலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் தமிழகத்தில் 203 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இது பேரதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், முதல் முதலில் அதிக பாதிப்புகளை கொண்ட ஈரோடு மாவட்டம் தற்போது கொரோனா இல்லாத ஊராக மாறியது சற்று சமாதானத்தை கொடுத்துள்ளது. அதேபோல, கோவை, தூத்துக்குடியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கை அடைந்திருக்கிறது.

அதேபோல, தமிழகத்தின் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலமாகவும் நேற்று வரை இருந்தது. இந்த நிலையில், அந்த ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் இன்று கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

பச்சை மண்டலம் இல்லாத மாநிலமானது தமிழகம்... கிருஷ்ணகிரியிலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது!

ஆந்திரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு 67 வயதுடைய முதியவர் உட்பட ஐவர் கடந்த மார்ச் 25ம் தேதி வந்துள்ளனர். அப்போது, மாவட்ட எல்லையான நல்லூரில் தடுத்து நிறுத்தி அந்த ஐவரின் பயண விவரங்களையும் கேட்டறிந்த போலிஸாரால், அவர்களை 28 நாட்களுக்கு தனிமையில் இருக்க உத்தரவிட்டுள்ளனர்.

நேற்றுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், ஆந்திராவில் இருந்து வந்த 67 வயதுடைய முதியவருக்கு இன்று காலை கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர், நல்லதம்பிசெட்டித் தெரு, காவேரிப்பட்டிணம், சண்முக செட்டித் தெரு, பழையபேட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், ஒரு பச்சை மண்டலம் கூட இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதால், மக்களிடையே இருந்த அச்சம் மேலும் கூடியுள்ளது.

banner

Related Stories

Related Stories