Corona Virus

நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மண்டல வாரியாக விதிமுறைகள் அறிவிப்பு! #Corona

ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மண்டல வாரியாக விதிமுறைகள் அறிவிப்பு! #Corona
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஊரடங்கு மே 3-ம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில் இதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,523 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,183 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மண்டல வாரியாக விதிமுறைகள் அறிவிப்பு! #Corona

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலப் பகுதிகளுக்கு ஏற்ப விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

விதிமுறைகளும் தளர்வுகளும்!

* மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது.

* அனைத்து மண்டலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மால்கள் திறக்கக்கூடாது என்ற தடை தொடரும்.

* பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி.

பச்சை மண்டல மாவட்டத்தில் அனைத்து பணிகளுக்கும் அனுமதி.

தங்கி இருந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு நகர்ப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை துவக்கலாம்.

பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி.

* ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் ஒரு பயணியுடன் வாடகை கார்கள் இயங்க அனுமதி.

மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

சொந்த கார்களில் ஓட்டுநருடன் சேர்த்து 3 பேர் மட்டும் பயணிக்கலாம். இருசக்கர வாகனங்களில் இருவர் செல்லலாம்.

* சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன், நிபந்தனைகளின்படி இயங்கலாம்.

* ஊரகப் பகுதிகளில் அனைத்து வகை தொழிலகங்கள், கட்டுமானப் பணிகள், கடைகள் செயல்படலாம்.

* நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.

banner

Related Stories

Related Stories