தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக 138 பேர் சென்னையில் வசிப்பவர்கள். இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 5, ராமநாதபுரம், காஞ்சிபுரத்தில் தலா 3, பெரம்பலூரில் 2, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,323 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 48 பேர் குணமடைந்துள்ளதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,258 ஆக உள்ளது. மேலும், உயிரிழப்பு ஏதும் இல்லாததால் 27 என்ற எண்ணிக்கையே தொடர்கிறது.
தற்போதைய நிலையில், அரசுக் கண்காணிப்பில் 40 பேரும், வீட்டுக் கண்காணிப்பில் 31 ஆயிரத்து 375 பேரும் உள்ளனர். இதைத் தொடர்ந்து, 1,035 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பாதிப்பு உறுதியான 161 பேரில் சென்னையில் 33 பேரும், ராணிப்பேட்டையில் ஒருவர் என 34 பேரும் முதல்நிலை தொற்று ஏற்பட்ட நபர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.