Corona Virus

சென்னையில் மேலும் 94 பேருக்கு கொரோனா.. 2 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் பாதிப்பு 2,162 ஆக உயர்வு! #Corona

தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்றைய தினம் (ஏப்ரல் 29) கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 10 வயதுக்கு கீழ் உள்ள 4 குழந்தைகள் உட்பட 94 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து, செங்கல்பட்டில் 4, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூரில் 1 மற்றும் விழுப்புரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரொனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சென்னையில் 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் இருவர் பலியாகினர். 65 வயதுடைய ஆணும், 27 வயது இளம்பெண்ணும் உயிரிழந்திருக்கிறார்கள்.

சென்னையில் மேலும் 94 பேருக்கு கொரோனா.. 2 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் பாதிப்பு 2,162 ஆக உயர்வு! #Corona

தொடர்ந்து, இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட 94 பேரில் 34 பேருக்கு முதல்நிலை தொற்றாக உள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று 82 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை ஒட்டுமொத்தமாக 1,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் 48 பேர் அரசுக் கண்காணிப்பிலும், 30,580 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும் இருக்கின்றனர். 922 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், இன்னும் 1,935 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories