Corona Virus

“கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் பருவகால நோயாக உருவெடுக்கும்” - சீன அறிவியலாளர்கள் எச்சரிக்கை! #Covid19

பருவகால நோயாக உருவெடுக்கும் போது இப்போது ஏற்படும் பாதிப்புக்கு நிகராக தாக்கம் உண்டாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 30 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலை கச்சிதமாக கட்டுப்படுத்தியுள்ளனர். சில நாடுகளில் கொரோனா இல்லாத பகுதியாகவே உருவாகிவிட்டது.

இப்படி இருக்கையில், சீனாவில் உள்ள உயிரியல் நிறுவனத்தின் இயக்குநரான ஜின்குய் என்பவர் ஆய்வு செய்து கூறுகையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸை போல மறைந்துப் போகக்கூடியது அல்ல தற்போது ஆட்டிப்படைத்து வரும் கோவிட் 19.

இந்த வகை கொரோனா வைரஸ், நீண்ட காலத்திற்கு மனிதர்களுடன் இணைந்திருக்கும். பருவ காலங்களில் இந்த கொரோனா வைரஸ் மீண்டும் தோன்றிப் பரவ வாய்ப்புள்ளது.

“கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் பருவகால நோயாக உருவெடுக்கும்” - சீன அறிவியலாளர்கள் எச்சரிக்கை! #Covid19

ப்ளூ காய்ச்சல் பரவுவது போல, கொரோனா வைரஸும் பருவ காலங்களில் தாக்க வாய்ப்புள்ளது. அப்போது, உயிரிழப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.

அதேபோல, அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் இயக்குநர் ஆண்டனி ஃபாசி கூறுகையில், சார்ஸ் வைரஸ் தாக்கியபோது அது வெறும் நுரையீரைலை மட்டுமே குறிவைத்தது. ஆனால், கோவிட் 19, மூக்கின் வழியே நுழையும்போதே அதன் வீரியத்தை காட்டத் தொடங்கி விடுகிறது.

ஆகவே இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் பேசினாலே பரவும் அபாயம் கொண்டது. பருவகால காய்ச்சலாக கொரோனா உருவெடுக்கும் போது குளிர் பிரதேசமாக உள்ள நாடுகளில் இப்போது ஏற்படும் பாதிப்பை போன்று மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்.

banner

Related Stories

Related Stories