Corona Virus

#Update : சென்னையில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா.. 34 பேர் டிஸ்சார்ஜ்.. மொத்த பாதிப்பு 1,937 ஆக உயர்வு!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் கொரோனா இல்லாத பாதிப்பாக தொடர்கிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 52 பேர் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த 52 பேரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 47 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1,937 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டோரில் சென்னையில் 4 பேரும், மதுரையில் இருவரும் முதல் நிலை கொரோனா நோயாளிகளாக உள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வரும் வேளையில், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒருசேர அதிகரித்து வருகிறது.

#Update : சென்னையில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா.. 34 பேர் டிஸ்சார்ஜ்.. மொத்த பாதிப்பு 1,937 ஆக உயர்வு!

அதன்படி, இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 81 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் 34 பேரும், கோவையில் 26 பேரும், சிவகங்கையில் 10, திருவாரூரில் 6, விழுப்புரத்தில் 5, தூத்துக்குடி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா 2 பேர் மற்றும் தேனியில் ஒருவரும் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். எனவே மாநிலத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு ஏதும் நிகழாததால் 24 என்ற பலி எண்ணிக்கையே தொடர்கிறது. மேலும், அரசு கண்காணிப்பில் 26 பேரும், வீட்டுக் கண்காணிப்பில் 26 ஆயிரத்து 797 பேரும் உள்ளதாகவும், 809 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories