Corona Virus

“ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்”- முதல்வர்கள் கூட்டத்தில் பொருளாதார உதவி குறித்து வாய் திறக்காத மோடி! #Corona

மாநிலங்களுக்கான பொருளாதார உதவிகள் குறித்து முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே இருப்பதால், மே 3 வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால், வல்லுநர்களோ குறைந்தபட்சம் மே மாதம் இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து பரவலான சோதனையை மேற்கொண்டு வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா பாதிப்பு குறித்தும் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதில், மத்திய பிரதேசம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

“ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்”- முதல்வர்கள் கூட்டத்தில் பொருளாதார உதவி குறித்து வாய் திறக்காத மோடி! #Corona

மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உடனடியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும், கொரோனா சோதனைக்கான கருவிகள், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதேபோல, ஊரடங்கை பொருளாதார விலக்குகளுடன் நீட்டிக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி இழப்பீடை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பொருளாதார உதவிகள் குறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்கள் கூறியுள்ளனர்.

முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆற்றிய உரை குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தையும் தொடர வேண்டும்.

எதிர்வரும் மாதங்களில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் தெரியவரும். மாஸ்க்குகள் வாழ்வின் அங்கமாக இருக்கக் கூடும். ஹாட் ஸ்பாட் பகுதிகளாக உள்ள சிவப்பு மண்டல மாநிலங்களை விரைவில் ஆரஞ்சு நிறமாகவும் பின்னர் பச்சை நிறமாகவும் மாற்ற மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி சூசகமாக கூறியதாகத் தெரிகிறது. அவ்வாறு செய்தால், ஏழை மக்களின் நலனுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்வது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories