Corona Virus

“ஊரடங்கு நீடித்தால் பல லட்சம் பேர் வறுமையில் சிக்குவார்கள்” - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை!

ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. இந்தியாவிலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவுக்கு பிறகான நிலை குறித்து நடைபெற்ற காணொளிக் காட்சி நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால் லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்புக்கு தள்ளப்படுவார்கள் என எச்சரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா நெருக்கடி முடிந்ததும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகச் செல்லும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“ஊரடங்கு நீடித்தால் பல லட்சம் பேர் வறுமையில் சிக்குவார்கள்” - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை!

5 சதவிகிதமாக இருந்த கடந்த ஆண்டின் வளர்ச்சியானது தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இந்த ஆண்டு நாம் நெகட்டிவ் வளர்ச்சி அல்லது பூஜ்ஜியம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கப்போகிறோம்.

ஊரடங்கு நடவடிக்கை விரைவில் நீக்கப்படாவிட்டால், தேசத்தில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள்.

ஆய்வாளர்கள் கணித்தபடி நாட்டில் ‘V’ வடிவ மீட்பு இருக்கும். நிலநடுக்கம் போண்ற இயற்கை பேரிடர்களால் நமது கட்டமைப்பு சேதமாகிவிடவில்லை. எனவே இயல்புநிலை திரும்பியதும் நாட்டின் பொருளாதாரம் எந்த வேகத்தில் இறங்கியதோ அதே வேகத்தில் மேலெழும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories