Corona Virus

பயிற்சி மருத்துவர்கள் முடக்கம், செவிலியர்களுக்கு கொரோனா - அரசு பொது மருத்துவமனையில் என்ன நடக்கிறது?

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் 95% பேர் விடுதியில் முடக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பயிற்சி மருத்துவர்கள் முடக்கம், செவிலியர்களுக்கு கொரோனா - அரசு பொது மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா நோய் தொற்று தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகிறது. அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் இந்நோய்க்கெதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில், முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் 95% பேர் பணிக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை மற்றும் முதிநிலை மருத்துவ மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதுநிலை மருத்துவர்கள் தனிப்பட்ட ஒரு துறையில் நிபுணத்துவம் பெற பயிற்சி மேற்கொள்கிறவர்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், பெரும்பாலும் முதுநிலை மருத்துவர்களே நோயாளிகளை கவனிக்கின்றனர்.

உதாரணத்துக்கு, இதயம் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வருகிறார் என்றால், முதுநிலை மருத்துவர்கள் தான் அவரை முதல் கட்ட பரிசோதனை செய்வார்கள். உள் நோயாளியாக அட்மிஷன் போடுவதில் இருந்து, அவ்வப்போது நோயாளியின் நிலையை கண்காணிப்பது, நிலை பற்றி குறிப்பெடுப்பது, மருந்து கொடுக்கப்படுகிறதா என மேற்பார்வை செய்வது எல்லாம் இந்த முதுநிலை மருத்துவர்கள் தான். இவர்களுக்கு மேல் உள்ள தலைமை மருத்துவர்கள், துறைத் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் நோயாளியை பரிசோதித்து விட்டு, அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதுநிலை மருத்துவர்களுக்கு அறிவுறுத்துவர். அதற்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் அரசு மருத்துவமனை இயங்குவதில் முதுநிலை பயிற்சி மருத்துவர்களின் பங்கு மிக முக்கியமானது.

தற்போது, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவர்கள் தங்கும், மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி PG விடுதி லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. பல முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட அரசு மறுக்கிறது.

கொரோனா வார்டில் பணியாற்றும் முதுநிலை மருத்துவர்கள் மட்டுமே, பணி செய்து வருகின்றனர். இதர துறைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், புதிதாக வரும் நோயாளிகளையும் கவனிக்கும் பணியில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். அதாவது கொரோனா சிகிச்சை தவிர, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து நோய் சிகிச்சை பிரிவுக்கும், அவசர சிகிச்சை பிரிவையும் சேர்த்து, ஒரே முதுநிலை மருத்துவர் மட்டுமே பணி செய்து வருகிறார். இதனால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அரசு மருத்துவமனை முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அவசர காலத்தில் உயிரை பணையம் வைத்து முன்னிலையில் நிற்கும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தராமல் தமிழக அரசு செய்த அலட்சியத்தின் விளைவு இன்று மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இல்லாத நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறையால், ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என சென்னையில் உள்ள இதர அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசு மருத்துவர்களின் உண்மை நிலை குறித்து தெளிவான விளக்கத்தை கொடுத்து, நிர்வாகத்தை சீர்படுத்தி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, அடிப்படை வசதிகளை செய்து தருவது இந்த அவசரகாலத்தின் முக்கியத் தேவையாக உள்ளது. முதலமைச்சரை துதிபாடுவதை விட்டுவிட்டு இவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்வதே, பிரச்னையை மேலும் சிக்கலாக்காமல் தடுக்கும்.

banner

Related Stories

Related Stories