Corona Virus

சென்னையில் மேலும் 685 பேருக்கு வைரஸ் அறிகுறி.. கொரோனா இல்லாத மண்டலமாக சோழிங்கநல்லூர்.. முழு அப்டேட்!

பெருநகர் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று இருந்த நிலையில் சோழிங்கநல்லூர் கொரோனா இல்லாத மண்டலமாக உருவெடுத்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுகாதாரத் துறையின் நேற்றைய அறிவிப்பின் படி, புதிதாக 72 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ 1,755 ஆக உயர்ந்துள்ளது. அதேச்சமயத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் ஒரு சேர அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் குணமடைந்திருக்கிறார்கள். மொத்தமாக 866 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.

சென்னையில் மேலும் 685 பேருக்கு வைரஸ் அறிகுறி.. கொரோனா இல்லாத மண்டலமாக  சோழிங்கநல்லூர்.. முழு அப்டேட்!

கிருஷ்ணகிரியை தவிர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 452 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில், நேற்றையை நிலவரப்படி, 160 பேர் குணமடைந்திருக்கிறார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 133 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில், 5 பேர் உயிரிழந்தும், 28 பேர் குணமாகியுமுள்ளனர்.

அதேபோல, 15வது மண்டலமான சோழிங்கநல்லூரில் பாதிக்கப்பட்ட இரண்டு கொரோனா நோயாளிகளும் தற்போது குணமடைந்திருப்பதால், சென்னையில் கொரோனா தொற்று இல்லாத மண்டலமாக சோழிங்கநல்லூர் உருவெடுத்துள்ளது.

வயது வாரியாக பாதிக்கப்பட்டவர்களில் 30-39 வயதுடையவர்கள் 91 பேருக்கும், 20-29 வயதில் 91 பேருக்கும், 40-49ல் 77 பேருக்கும், 50-59ல் 74 பேருக்கும், 60-69ல் 39 பேருக்கும், 70-79ல் 19 பேருக்கும், 10-19ல் 35 பேருக்கும், 80 வயதை கடந்தவர்களில் 8 பேருக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் 8 பேருக்கும் தொற்று உள்ளது.

மேலும், வீடு வீடாகச் சென்று கொரோனா பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 9 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்படும், அறிகுறிகள் உள்ள 685 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories