Corona Virus

“ஊரடங்கே இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தி சாதித்த பெண்கள் ஆளும் நாடுகள்” சாத்தியமானது எப்படி? #COVID19

உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் சிக்கித் தவிக்கும் வேளையில் பெண்களால் ஆட்சி செய்யப்பட்டு வரும் நாடுகளில் மிக துரிதமாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் தொடங்கி, அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய தேசங்களைச் சிதைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1.30 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்தும், சுமார் 25 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையிலும் உள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளே இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சிக்கித் திணறி வரும் வேளையில், வளர்ந்து வரும் நாடுகள் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து உலக நாடுகளுக்கு உதாரணமாகத் திகழ்கின்றன. அதிலும் பெண் தலைவர்கள் ஆட்சி புரிந்துவரும் நியூசிலாந்து, தைவான், ஐஸ்லாந்து நாடுகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

“ஊரடங்கே இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தி சாதித்த பெண்கள் ஆளும் நாடுகள்” சாத்தியமானது எப்படி? #COVID19

நியூசிலாந்து : உலகிலேயே முதன்முறையாக மகப்பேறு விடுப்பு எடுத்த பிரதமர் என்ற பெருமையைp பெற்றவர் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆடன். இதன் மூலம் உலகளாவிய பெண்களின் கவனத்தை ஈர்த்த அவருக்கு, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாமல், மக்களின் நலனுக்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஜெசிந்தா. அயல்நாட்டினர் நியூசிலாந்துக்குள் நுழைய மார்ச் 19ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இப்படியாக தொடங்கிய நடவடிக்கை மார்ச் 23ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது வரையிலான வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,456 ஆக மட்டுமே உள்ளது. உயிரிழப்பும் 17 மட்டுமே ஆகும்.

“ஊரடங்கே இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தி சாதித்த பெண்கள் ஆளும் நாடுகள்” சாத்தியமானது எப்படி? #COVID19

தைவான்: சீனாவுடனான எல்லைப் பகிர்வு, போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தையும் மிக அருகே கொண்டிருந்தாலும் 2003ம் ஆண்டு சார்ஸ் வைரஸின் கோரப்பிடியில் இருந்து மீண்ட தைவான், அதனை ஒரு பாடமாகக் கொண்டு கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

ஆகவே, மற்ற நாடுகளுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்தார் அந்நாட்டு அதிபர் சை இங்வென். தடுப்புப் பணிக்காக நிபுணர் குழுவை உருவாக்கிய இங்வென், தொற்று உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையை முடுக்கிவிட்டு துரிதமாகச்ப்ப செயல்பட்டார்.

“ஊரடங்கே இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தி சாதித்த பெண்கள் ஆளும் நாடுகள்” சாத்தியமானது எப்படி? #COVID19

கூடுதல் தகவல் என்னவெனில், தைவானில் பொருளாதார நிலைக்கு எவ்வித பங்கமும் வராத வகையில், பொது ஊரடங்கு அறிவிக்கப்படாமலேயே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டும், மக்கள் அதிகளவில் கூடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக தைவானில் இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக மட்டுமே இருப்பது அண்டை நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐஸ்லாந்து : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது, பரிசோதனைகளை அதிகப்படுத்தி தொற்றுள்ளவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் மட்டுமே வெற்றிகாண முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதை அச்சுபிசகாமல் நடைமுறைப்படுத்திய நாடு என்றால் அது ஐஸ்லாந்துதான்.

“ஊரடங்கே இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தி சாதித்த பெண்கள் ஆளும் நாடுகள்” சாத்தியமானது எப்படி? #COVID19

கொரோனா பரிசோதனைகள் அனைத்தையும் அரசே ஏற்றது. உலகின் மற்ற நாடுகளில் கொரோனா பரவியபோது ஐஸ்லாந்தில் பொது இடங்களில் 20 பேருக்கு மேல் கூடுவதற்கு பிரதமர் கேத்தரின் தடை விதித்து ஊரடங்கை அறிவிக்காமல் இருந்தார். இதற்கு மக்களின் கட்டுப்பாடும், ஒத்துழைப்பும் மிகுந்த உதவியாக இருந்ததே காரணம். இதனால் 10 உயிரிழப்புடன் 1,789 பேர் மட்டுமே ஐஸ்லாந்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, பெண் தலைவர்கள் ஆளக்கூடிய ஜெர்மனி, டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கும், உத்தரவுகளுக்கும் மக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம் என்பது மேற்குறிப்பிட்ட நாடுகளே சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

banner

Related Stories

Related Stories