Corona Virus

"4 நாட்களுக்கு முழு ஊரடங்கு" : எவற்றிற்கெல்லாம் அனுமதி... எவற்றிற்கு தடை? - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

முழு ஊரடங்கின்போது எவற்றிற்கெல்லாம் அனுமதி இல்லை என்பது குறித்த அறிவிப்பை சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தொற்று அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிக்குள் 26-4-2020 காலை 6 மணி முதல் 29-4-2020 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முழு ஊரடங்கின்போது எவற்றிற்கெல்லாம் அனுமதி இல்லை, எவற்றிற்கெல்லாம் விதிவிலக்கு என்பது குறித்த அறிவிப்பையும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது :

1) மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவம் சார்ந்த இதர சேவைகள் அனுமதிக்கப்படும்.

2) மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படும் 33 சதவீதப் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

3) அம்மா உணவகங்கள், பொது விநியோக கடைகள், ஏ.டி.எம் இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும்.

"4 நாட்களுக்கு முழு ஊரடங்கு" : எவற்றிற்கெல்லாம் அனுமதி... எவற்றிற்கு தடை? - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

4) பெட்ரோல், டீசல் நிலையங்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை செயல்படும்.

5) பால் விநியோகம், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம், குடிநீர் வழங்கல் வழக்கம்போல் செயல்படலாம்.

6) உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி உண்டு.

7) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

8) ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) செயல்படும்.

9) ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

10) கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படும்.

11) காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

12) மளிகை கடைகள் மற்றும் இதர கடைகளுக்கு அனுமதி இல்லை.

13) இறப்பு மற்றும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்காக மட்டும் வெளியூர் பயணம் மேற்கொள்ள இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மற்ற எந்த காரணங்களுக்காகவும் பயணம் செய்ய அனுமதி இல்லை.

13) பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் செயல்படலாம்.

banner

Related Stories

Related Stories