Corona Virus

மக்களின் மீது பழிபோட தீவிரமாக உழைக்கிறதா எடப்பாடி அரசு? - எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்!

தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரும், மத்திய மாநில அரசுகளின் போதாமையால் சிக்கல் நீடித்து வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மற்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்தபோதே நடவடிக்கைகளை எடுக்காததால், இந்தியா தற்போது பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. தற்போது வரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளர். மேலும் இதுவரை 783 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதற்கான விலையை இந்தியா கொடுத்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரும், மத்திய மாநில அரசுகளின் போதாமையால் சிக்கல் நீடித்து வருகிறது.

ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதும், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நகரங்களில் பணி செய்து வந்த பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல வழியின்றியும், வேலையின்றியும், உண்ண உணவின்றியும் தவித்தனர்.

மக்களின் மீது பழிபோட தீவிரமாக உழைக்கிறதா எடப்பாடி அரசு? - எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்!

இதனால் வேறு வழியின்றி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குழுமியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனாவை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு, அரசின் மோசமான நடவடிக்கையால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தராமல் மக்களை அலைக்கழித்தது எடப்பாடி அரசு.

நேற்றும் இதேபோல ஒன்று. மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதை ஒழுங்குபடுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம், QR Code வசதி கொண்ட வாகன அனுமதி சீட்டு வழங்க முடிவு செய்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் இரவில் திடீரென அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து, முதல்நிலை பணிகளுக்குச் செல்வோரும், அத்தியாவசிய தேவை உள்ளோரும் வாகனத்துக்கான அனுமதியைப் பெற ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கில் குவிந்தனர். கூட்டம் ஏற்படாமல் தவிர்க்க எந்த திட்டமும் இன்றி செயல்பட்டு கொரோனா தொற்று ஏற்பட வழிவகை செய்யும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்தது.

மக்களின் மீது பழிபோட தீவிரமாக உழைக்கிறதா எடப்பாடி அரசு? - எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்!

இந்நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் அச்சமடைந்த மக்கள் இன்று அத்தியாவசியத் தேவைகளுக்காக ஆங்காங்கே ஒரே நேரத்தில் குழுமினர். தனிமனித இடைவெளி விதிமுறை மிகக் கடுமையாக மீறப்பட்டுள்ளது. இத்தகைய நிலைக்கு அரசே முழுமுதற் காரணம்.

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமைப்படுத்த அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அத்தியாவசியத் தேவைகளையும் உறுதி செய்த பிறகு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம்.

மக்களின் மீது பழிபோட தீவிரமாக உழைக்கிறதா எடப்பாடி அரசு? - எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்!

முன்னுக்குப் பின் முரணாக அரசு செயல்பட்டு வருவதால், 4 நாட்களுக்கு அதிகமாகவும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என அஞ்சியே வெகுமக்கள் வெளியேறி அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே குவிந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குவிந்த கூட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதுபோன்ற அரசின் மோசமான நடவடிக்கைகள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மக்களிடையே கொரோனா அச்சத்தை விலக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி, மக்களைக் காக்க வேண்டிய அரசே மக்களை கொரோனா பிடியில் சிக்க வைக்க தீவிரமாக உழைக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories