Corona Virus

ரேண்டம் பரிசோதனையைத் துவக்கும் கேரளா... கொரோனா சமூக பரவல் நிலையைத் தடுக்க அதிரடி திட்டம்! #Covid19

கேரளாவில் கொரோனா பரிசோதனையை ரேண்டம் முறையில் நடத்திட இருப்பதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

ரேண்டம் பரிசோதனையைத் துவக்கும் கேரளா... கொரோனா சமூக பரவல் நிலையைத் தடுக்க அதிரடி திட்டம்! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 727 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளாவில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் இறப்புகளைத் தடுப்பதிலும் முன்மாதிரியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆக உள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பரிசோதனையை ரேண்டமாக மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

ரேண்டம் முறையில் பரிசோதனை செய்வதன் மூலமாக கேரளாவில் கொரோனா தொற்று பரவல் சமூகப் பரவல் கட்டத்தை எட்டியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திவிட முடியும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தொற்று சமூகப் பரவல் அளவில் பரவுவதையும், அதன் பின்னான கடும் விளைவுகளையும் தவிர்க்க ரேண்டம் பரிசோதனை அவசியமாகிறது.

ரேண்டம் பரிசோதனையைத் துவக்கும் கேரளா... கொரோனா சமூக பரவல் நிலையைத் தடுக்க அதிரடி திட்டம்! #Covid19

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனையைத் தொடங்கியது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தேசிய அளவில் கொரோனா தொற்று சமூகப் பரவலை எட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சோதனைகளில் ஒரு சதவிகிதத்தினருக்கு தொற்று பரவல் மூலத்தை சரியாகக் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டியதால் இக்கருவிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது சரிசெய்யப்பட்ட பின்னரே மீண்டும் பரிசோதனை அதிகமானோருக்கு நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், கேரளா ரேண்டம் டெஸ்ட் செய்யவிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories