Corona Virus

“உலகளவில் உயிரிழந்தோர் 1,84,230 ஆக உயர்வு - கொரோனா தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும்” : அதிர்ச்சி தகவல்!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 184,230 ஆக உயர்ந்துள்ளது.

ThePrint
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 184,230ஐ நெருங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,637,790 ஆக அதிகரித்துள்ளது. இதில் 717,812 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 681 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,370 ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.

“உலகளவில் உயிரிழந்தோர் 1,84,230 ஆக உயர்வு - கொரோனா தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும்” : அதிர்ச்சி தகவல்!

உலக அளவில், கொரோனா பாதிப்பில் தற்போது அதிகம் பாதிக்கப்படும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் 848,994 -க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47,676 ஆக உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக, ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,717 -ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208,389 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

வைரஸ் பாதிப்பின் உயிர்பலி உலக மக்களை நடுங்கச் செய்துள்ளது. மக்கள் ஊரடங்கைக் கடைபிடிப்பதே ஒரே வழி. விரைந்து நடவடிக்கை எடுக்க ஐ.நா-வும் வலியுறுத்திவருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நகரங்களை முடக்குவது போதாது; தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவன அமைப்பின் உயர்மட்ட நிர்வாகி மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories