Corona Virus

100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி - வேறு எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்? #CoronaLockdown

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ஆலைகளும் முடக்கப்பட்ட நிலையில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ஆலைகளும் முடக்கப்பட்ட நிலையில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்கான தயாரிப்பு, விற்பனை தவிர மற்ற நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்புடன் அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், நிபுணர் குழு அளித்த பரிந்துரைப்படி 20-ம் தேதிக்கு பின்னரரும் தளர்வு இல்லை என்றும் ஊரடங்கு நீடிக்கும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய தொழிலதிபர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில், ஆலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டால் தொழிற்சாலைகளிலேயே ஒரு பகுதியில் தொழிலாளர்கள் தங்க இடம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும் என்றும் தகுந்த வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி - வேறு எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்? #CoronaLockdown

இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமாயின் தொழிற்சாலைகள் சில இயங்க அனுமதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளின்போது, எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், 1.சுத்திகரிப்பு ஆலைகள் , 2.பெரிய அளவிலான உருக்கு ஆலைகள், 3.பெரிய அளவிலான சிமெண்ட் ஆலைகள், 4. பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்முறை இரசாயன தொழில்கள்,5. உர ஆலைகள், 6.சர்க்கரை ஆலைகள்,7.கண்ணாடி ஆலைகள், 8. டயர் ஆலை, 9.காகித ஆலை,10 தொடர்ச்சியான செயல்முறை கொண்ட பெரிய கட்டுமானங்கள் உள்ளிட்டவை இயங்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories