Corona Virus

#CoronaUpdate: சென்னையில் 400ஐ எட்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 20 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமாகியுள்ளனர். அதிகபட்சமாக ஈரோடு, கோவை, நெல்லையில் முறையே 29, 27, 20 பேர் குணமடைந்துள்ளனர்.

#CoronaUpdate: சென்னையில் 400ஐ எட்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதி!

அதேநேரம், இன்று ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் நால்வர் உட்பட 27 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தருமபுரியிலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேசமயத்தில், இன்று இருவர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கையும் 20 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#CoronaUpdate: சென்னையில் 400ஐ எட்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதி!

மேலும், தமிழகத்தில் மொத்தமாக 65 ஆயிரத்து 977 பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதில் இன்று பரிசோதனை நடைபெற்ற 6,954 பேரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அரசு கண்காணிப்பில் 103 பேரும், வீட்டுக் கண்காணிப்பில் 23,303 பேரும் இருப்பதாகவும், 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 87 ஆயிரத்து 159 பேர் எனவும் அந்த அறிக்கையின் மூலம் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories