Corona Virus

“புதியதோர் நம்பிக்கை ஒளி” - இந்தியாவில் பிளாஸ்மா தெரபி மூலம் மீண்ட முதல் கொரோனா நோயாளி! #COVID19

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளி தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில், வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் மூலம் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை குணப்படுத்தும் பிளாஸ்மா தெரபியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கையில் எடுத்துள்ளது.

இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குணமடந்தவர்களின் விருப்பத்தை ஆராய்ந்துவிட்டு பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தோ, குணப்படுத்துவதற்கான மருந்தோ ஏதும் இல்லாத காரணத்தால் தற்போதைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் கொண்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொண்டும் நோயாளிகள் குணமாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்து 72 பேர் குணமாகியுள்ளனர்.

“புதியதோர் நம்பிக்கை ஒளி” - இந்தியாவில் பிளாஸ்மா தெரபி மூலம் மீண்ட முதல் கொரோனா நோயாளி!  #COVID19

அவ்வாறு குணமானவர்களின் ரத்த நீரை (பிளாஸ்மா) எடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளவர்களுக்கு செலுத்தி சிகிச்சை மேற்கொள்வதே பிளாஸ்மா தெரபி. ஏனெனில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடலில் உள்ள ஆண்டிபாடி, தொற்று உள்ளவர்களின் உடலில் செலுத்தினால் அது வைரஸை எதிர்த்துப் போராடும். அதன் மூலம் அந்த நோயாளி குணமடையக் கூடும்.

அந்த வகையில் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஏப்ரல் 4ம் தேதியன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயதுடைய நபர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது அவருக்கு கொரோனாவால் குணமானவரின் பிளாஸ்மா செலுத்தப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்ததோடு, இருமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று எதிர்மறையாக வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் முதல் நபர் குணமாகியிருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“புதியதோர் நம்பிக்கை ஒளி” - இந்தியாவில் பிளாஸ்மா தெரபி மூலம் மீண்ட முதல் கொரோனா நோயாளி!  #COVID19

தடுப்பு மருந்துகளே இல்லாத இக்கட்டான சூழலில் பிளாஸ்மா சிகிச்சை கைகொடுத்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துள்ளது. இதுபோன்று, கொரோனாவால் குணமானவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வந்துள்ளதும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories