Corona Virus

#CoronaUpdate தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் புதிதாக 15 பேர் பாதிப்பு!

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று மட்டும் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் மட்டும் புதிதாக 15 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

#CoronaUpdate தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் புதிதாக 15 பேர் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18 உயிரிழப்பு மற்றும் 662 குணமடைந்தவர்கள் நீங்கலாக 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு கண்காணிப்பில் 155 பேரும், வீட்டுக் கண்காணிப்பில் 23,760 பேரும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் நேரவில்லை.

#CoronaUpdate தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் புதிதாக 15 பேர் பாதிப்பு!

இன்று தொற்று உறுதியாகியுள்ள 33 பேரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண்மணி மற்றும், மதுரையைச் சேர்ந்த இரண்டு ஆண்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்ததற்கான தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories