Corona Virus

#CoronaUpdate குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியருக்கு கொரோனா.. ஐசோலேட் ஆனது 125 குடும்பங்கள் ! 

ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் தலைநகரில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி உள்ளது. அங்கு 2081 பேருக்கு இதுவரை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொது வெளியில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ அவ்விடமே ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

#CoronaUpdate குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியருக்கு கொரோனா.. ஐசோலேட் ஆனது 125 குடும்பங்கள் ! 

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அநாவசியமாக மக்கள் வெளியே நடமாடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் 125 ஊழியர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories