Corona Virus

“கொரோனாவால் பலியான டாக்டரை அடக்கம் செய்ய அவமதிப்பது தமிழ் நாகரிகத்துக்கே தலைகுனிவு” - மருத்துவர் வேதனை!

வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் இருமவோ, தும்மவோ முடியாதபோது கொரோனா பரவுவது சாத்தியமில்லாதது என மருத்துவர் அமலோற்பவநாதன் கூறியுள்ளார்.

“கொரோனாவால் பலியான டாக்டரை அடக்கம் செய்ய அவமதிப்பது தமிழ் நாகரிகத்துக்கே தலைகுனிவு” - மருத்துவர் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய காவல் துறையினரின் பாதுகாப்புடன் அவரது உறவினர்கள் எடுத்துச் சென்ற போது, அந்தப் பகுதி மக்கள் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

பின்பு அருகிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனை அறிந்து அந்த பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர் சைமன்
மருத்துவர் சைமன்

இந்த சம்பவம் பிற மருத்துவர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியோ, கொரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்யுங்கள் என்ற போது ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு வந்து கொண்டாடினர். ஆனால், அந்த மருத்துவருக்கே ஒரு அபாயம் எனும் போது ஆறடி இடம் கூட கொடுக்க இந்த மக்கள் தயங்குவது ஏன் என தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் உடலை தொடாத வரையில் வைரஸ் தொற்று ஏற்படப்போவதில்லை என மருத்துவர் அமலோற்பவநாதன் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த கொரோனா வைரஸ் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமே பரவும். ஆகவே கொரோனாவால் இறந்த ஒருவர் தும்மவோ, இருமவோ போவதில்லை. எந்த வைரஸும் 8 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட பிறகும், 4000 டிகிரி வெப்பநிலையில் எரிந்த உடலில் இருந்து பரவாது.

“கொரோனாவால் பலியான டாக்டரை அடக்கம் செய்ய அவமதிப்பது தமிழ் நாகரிகத்துக்கே தலைகுனிவு” - மருத்துவர் வேதனை!

அந்த உடலை புதைக்கப்பட்ட மண்ணில் இருந்தோ, எரித்ததற்கு பிறகு வரும் புகை மற்றும் நெருப்பில் இருந்தோ கொரோனா வைரஸ் பரவப்போவதில்லை. அவ்வாறு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் 1% சோடியம் ஹைப்போகுளோரைடு கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாதுகாப்பான முறையிலேயே அடக்கம்/தகனம் செய்ய உட்படுத்தப்படுகிறது.

எனவே, மக்களின் உயிரை காப்பாற்றும் உண்ணதமான சேவை புரியும் மருத்துவர்களின் உடலை அடக்கம் கூட செய்ய விடாமல் அவமரியாதை செய்வது தமிழ் நாகரிகத்துக்கே தலைகுனிவாக உள்ளது என மருத்துவர் அமலோற்பவநாதன்

banner

Related Stories

Related Stories