Corona Virus

“இந்தியாவில் பலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவுகிறது” - ICMR மூத்த விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

கொரோனா பரவல் தீவிரமடையும் வேளையில் மத்திய அரசு ஊரடங்கில் தளர்வை கொண்டு வருவது நாட்டுக்கே கேடாக அமையும்.

“இந்தியாவில் பலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவுகிறது” - ICMR மூத்த விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 17 ஆயிரத்து 874 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 2,900 பேர் நாடளவில் குணமடைந்திருந்தாலும், 568 பேர் உயிரிழந்தது கவலையை அளிக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,553 பேர் தொற்று பாதிக்கப்பட்டு, 36 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். இதனால், ஏழை எளியோர் வெகுவாக பாதிப்பை சந்திப்பார்கள். இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியான ராமன்.ஆர்.கங்காகேதர் அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

“இந்தியாவில் பலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவுகிறது” - ICMR மூத்த விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

அதாவது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 80 சதவிகிதம் பேருக்கு வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று அதிர்ச்சி குண்டை வீசியுள்ளார். தொற்று பாதிப்பு உள்ளவர்களுடனான தொடர்பை கண்டறிதல் (Contact Tracing) முறை மட்டுமே கைகொடுக்கிறது என்று கங்காகேதர் கூறியுள்ளார்.

நோய்த் தாக்குதலுக்கான அறிகுறியே இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் நீடிக்கிறது. ஆகவே மக்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து ஊரடங்கு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என கங்காகேதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் நேற்று முன் தினம் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 186 பேருக்கும் கொரோனா பாதித்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலில் மத்திய அரசு ஊரடங்கில் தளர்வைக் கொண்டுவர முயற்சிப்பது நாட்டுக்கே கேடாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories