Corona Virus

UPDATE: “திருப்பூரில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதி..” தமிழகத்தில் 1,372 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களுக்கு குறைவாக இருந்த நிலையில், நேற்று 56 பேருக்கு தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இன்றைய நிலவரப்படி மேலும் 49 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அப்போது, 49 பேரில் அதிகபடியாக திருப்பூரில் 28 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறிய அவர், சென்னையில் 7, தென்காசியில் 4, திண்டுக்கல், பெரம்பலூரில் தலா 3, நெல்லையில் 2, கோவை, தஞ்சையில் தலா 1 என 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 82 பேர் டிஸ்சார்ஜ் ஆகியதுடன் மொத்தமாக 365 பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். உயிரிழப்பு இன்று ஏதும் ஏற்படாததால் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

UPDATE: “திருப்பூரில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதி..” தமிழகத்தில் 1,372 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நடத்த மேலும் 3 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைப்படி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சிகிச்சையில் உள்ள 1007 பேரும் தற்போது 95 சதவிகிதம் ஆரோக்கியமாகவே உள்ளனர். குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர வெளியில் இருந்து யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories