Corona Virus

ஊரடங்கால் கொண்டாட முடியாமல் போன குழந்தையின் பிறந்தநாள்.. நேரில் சர்ப்ரைஸ் கொடுத்த பஞ்சாப் போலிஸ்! VIDEO

குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போனதால் கவலையில் உறைந்த பெற்றோருக்கு பஞ்சாப் போலிஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஊரடங்கால் கொண்டாட முடியாமல் போன குழந்தையின் பிறந்தநாள்.. நேரில்  சர்ப்ரைஸ் கொடுத்த பஞ்சாப் போலிஸ்! VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு வாரத்திற்கு தேவையானதை வாங்கி வைத்துக்கொள்ளும் சூழலும் நிலவுகிறது.

இதனால், வியாபாரிகளுக்கும் விற்பனை மந்தமாகவே நடைபெறுகிறது. மக்களிடையே பிடித்ததை வாங்கும் வழக்கமும் ஊரடங்கால் குறைந்துக்கொண்டே வருகிறது. ஏனெனில் எதன் மூலமாவது வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருப்பினும், அரசே முன்வந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகித்து வருகிறது.

மேலும், காவல்துறையைச் சேர்ந்தவர்களே முதியவர்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து வருகின்றனர். அவ்வகையில், இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மான்ஸா மாவட்டத்தில் ஒரு வயது குழந்தைக்கு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் கேக் வழங்கியுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

மான்ஸாவில் உள்ள மாய்ரா என்ற ஒரு வயது குழந்தைக்கு இன்று பிறந்த நாள். ஆனால், ஊரடங்கு காரணமாக பெற்றோரால் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போயுள்ளது. இதனை எப்படியோ அறிந்த அப்பகுதி போலிஸார், மாய்ராவின் வீட்டுக்கேச் சென்று குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பஞ்சாப் போலிஸாரின் செயலுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதே போன்ற நிகழ்வு அமெரிக்காவிலும் நிகழ்ந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். இந்த நிலையில், சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்த நாளுக்கு நண்பர்கள் யாரும் பங்கேற்க முடியாமல் போனது பற்றி தந்தையிடம் கவலையுடன் தெரிவித்திருக்கிறான்.

இதனையடுத்து, காவல்துறையை தொடர்பு கொண்ட அந்த தந்தை, தன் மகனின் கவலை குறித்து தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு ரோந்து வாகனங்களில் அணிவகுத்து வந்த போலிஸார், சிறுவனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பாட்டு பாடி மகிழ்வித்தனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories