Corona Virus

“சத்தீஸ்கர் அமைச்சரை பாருங்கள்... தமிழக அரசிடம் இதைத்தான் கேட்கிறோம்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா தடுப்புப் பணியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“சத்தீஸ்கர் அமைச்சரை பாருங்கள்... தமிழக அரசிடம் இதைத்தான் கேட்கிறோம்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரிசோதனை கருவிகளின் எண்ணிக்கை வாங்கிய விலை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. பரவலான சோதனை நடத்தப்பட வேண்டும், அதற்கு ரேபிட் கிட் மூலம் ஆய்வு நடத்தப்படவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு ரேபிட் கிட்கள் வந்துள்ளதாகவும், சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பரிசோதனைக் கருவிகள் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, சுகாதாரத்துறை செயலாளர் வரை முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில அமைச்சரின் சமூக வலைதள பதிவைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பின்வருமாறு :

“கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்!”

banner

Related Stories

Related Stories