Corona Virus

தமிழகத்தில் முதல்முறையாக “ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா பரிசோதனை - சேலத்தில் துவக்கம்! #Covid19

தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் "ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது.

தமிழகத்தில் முதல்முறையாக “ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா பரிசோதனை - சேலத்தில் துவக்கம்! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் "ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது.

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும், பரிசோதனைகள் மிகக் குறைவாக இருப்பதால் நோய்த் தொற்றின் தாக்கம் சரிவரத் தெரியவரவில்லை எனக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. பரவலான சோதனை நடத்தப்பட வேண்டும், அதற்கு ரேபிட் கிட் மூலம் ஆய்வு நடத்தப்படவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிசிஆர் கருவிகள் நோய்த்தொற்றை உறுதிப்படுத்த எடுக்கப்படும் சோதனைக் கருவி. ஆனால் ரேபிட் கிட்கள் பரவலாக அனைத்துத் தரப்பினரையும் முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தும் கருவி. இதன் மூலம் அரை மணிநேரத்தில் தொற்று உள்ளவர்கள், தொற்று சந்தேகம் உள்ளவர்களை சாதாரண பொதுமக்களிடமிருந்து வகைப்படுத்தலாம்.

அதற்காக தமிழக அரசு 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் ஆர்டர் செய்தது. இதற்கிடையே மத்திய அரசின் மூலமே இவை வாங்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா இடையில் புகுந்து ரேபிட் கருவிகளை வாங்கிவிட்டது என்பதாலும் தமிழகத்துக்கு ரேபிட் கருவிகள் வரவில்லை எனக் கூறப்பட்டது.

தமிழகத்தில் முதல்முறையாக “ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா பரிசோதனை - சேலத்தில் துவக்கம்! #Covid19

இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரேபிட் கிட் மூலம் நோயாளிகளை பரிசோதனை செய்யும் முறை இன்று சேலம் அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த நவீன முறையை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளதா என ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும். இந்த பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்தில் அறிவிக்கப்படும்.

இதனைக் கொண்டு மாவட்டத்தில் நோய் தாக்கம் உள்ளதா என சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் சாதாரணமான மனிதர்களுக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories