Corona Virus

"PM Cares நிதி அதிகாரப்பூர்வமானதல்ல" : மோடி தலைமையில் பல்லாயிரம் கோடி முறைகேடு? - வெடிக்கும் சர்ச்சை!

PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

"PM Cares நிதி அதிகாரப்பூர்வமானதல்ல" : மோடி தலைமையில் பல்லாயிரம் கோடி முறைகேடு? - வெடிக்கும் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares எனும் நிதி அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி. பிரதமரின் நிவாரண நிதிக் கணக்கில் செலுத்தப்படும் தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அரசுக்கு வர வேண்டிய இந்த நிவாரணத் தொகை தனியார் துவங்கிய ஒரு சேரிட்டபிள் ட்ரஸ்ட்டுக்கு போகிறது. இதற்கு வழங்கும் பணம் அனைத்தும் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது. இதை மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG தணிக்கை செய்யாது. தனியான ஆடிட்டர்கள்தான் இந்த நிதியை தணிக்கை செய்வார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது CSR தொகையை (Corporate Social Responsibility) இந்த தனியார் கணக்கில்தான் கோடிகோடியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்கள் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாயை PM cares நிதிக்கு வழங்கியுள்ளனர்.

"PM Cares நிதி அதிகாரப்பூர்வமானதல்ல" : மோடி தலைமையில் பல்லாயிரம் கோடி முறைகேடு? - வெடிக்கும் சர்ச்சை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அரசு, இன்னல்களை அனுபவிக்கும் மக்களிடமே மீண்டும் கையேந்தி நிற்கிறது. படேலுக்கு பிரமாண்ட சிலை போன்ற தேவையற்ற கட்டுமைப்புகளுக்காக பல்லாயிரம் கோடியைச் செலவழிக்கும் அரசு பேரிடர் காலத்தில் நிதிக்காக மக்களைச் சுரண்டுகிறது.

கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் நரேந்திர மோடி தலைமையிலான இந்த சேரிட்டபிள் டிரஸ்ட் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை பொறுப்பில் வைத்து கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து வருகிறது.

பிரதமரின் நிவாரண நிதி திட்டம் (Prime Minister's National Relief Fund) ஏற்கனவே இருக்கும்போது இந்தப் புதிய திட்டம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

"PM Cares நிதி அதிகாரப்பூர்வமானதல்ல" : மோடி தலைமையில் பல்லாயிரம் கோடி முறைகேடு? - வெடிக்கும் சர்ச்சை!

PM Cares மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது.

இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது. இப்படியாக, மக்கள் பணத்தை கேட்பாரின்றி ஒரு கணக்கில் குவித்து வருகிறது மோடி அரசு.

இது குறித்து ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, இந்த நிதி குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிதி திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories