Corona Virus

“தலைமுடி வழியாக கொரோனா பரவும்” - மொட்டையடித்து சானிடைசர் தடவிக்கொள்ளும் ம.பி போலிஸ்!

கொரோனா பரவுதல் தொடர்பாக வெளிவரும் வதந்திகளுடன் மத்திய பிரதேச போலிஸாரின் செயல்களும் இணைந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தில், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக போலிஸார் தலையை மொட்டையடித்துக்கொண்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

கடந்த வாரம் வரை அந்த மாநிலத்தில் மூன்று இலக்கங்களில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தைக் கடந்துள்ளது. 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். இதில் இந்தூரில் மட்டுமே 707 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இந்தூர் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அந்த மாவட்டத்தில் உள்ள சந்தன் நகரில் ஊரடங்கு பணியில் உள்ள 5 போலிஸார் கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக தலைமுடியை மொட்டையடித்துள்ளனர்.

“தலைமுடி வழியாக கொரோனா பரவும்” - மொட்டையடித்து சானிடைசர் தடவிக்கொள்ளும் ம.பி போலிஸ்!

இதுமட்டுமல்லாமல், மொட்டையடித்த தலையில் கிருமிநாசினி கொண்டு தடவியும் வருகிறார்கள். ஏனெனில், தலைமுடி மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தூரைச் சேர்ந்த போலிஸ் ஆய்வாளர் யோகேஷ் தோமர் கூறியுள்ளார்.

தொற்று இருப்பவர்களை தொடுவதன் மூலமும், அவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொடர்பாக ஏகப்பட்ட வதந்திகளும், கட்டுக்கதைகளும் வெளிவரும் பட்டியலில் தற்போது மத்திய பிரதேச போலிஸாரின் கண்டுபிடிப்பும் இணைந்துள்ளது.

இதன் காரணமாக, சாமானிய மக்களும் இதுபோன்று மொட்டையடிக்கும் நிலை உண்டாகும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்ததோடு, காவல்துறையினரின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories